BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
திருப்பூரில் யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம்; பொறியியல் பட்டதாரி பெண் உயிரிழப்பு!
திருப்பூரில் மருத்துவமனைக்கே செல்லாமல், எவ்வித மருத்துவ ஆலோசனையும் பெறாமல், யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்ததில் கர்ப்பிணிப்பெண் இறந்துள்ளார். இதில் பிறந்த பெண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மரணம் தொடர்பாக, இறந்துபோன பெண்ணின் கணவன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைது செய்யவில்லை என்று காவல்துறையினர் கூறினர்.
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் சீனாவிடம் எவ்வளவு அணு ஆயுதங்கள் உள்ளன?
சமீபத்திய ஆண்டுகளில் சீனா தனது அணுசக்தி திறன்களை வேகமாக நவீனப்படுத்தியுள்ளது என்று மேற்கத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.
சத்தீஸ்கர்: மதுவில் விஷம் கலந்து 8 பேர் கொலை - குற்றம் சாட்டப்பட்டவர் கூறிய காரணங்கள் என்ன?
மூடநம்பிக்கை காரணமாகவே கொலைகள் செய்யப்பட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்; ஆனால், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அத்தகைய ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மணிக்கணக்கில் அமர்ந்து வேலை பார்க்கிறீர்களா? - 5 நிமிட நடைபயிற்சி உங்களுக்கு உதவலாம்
நீண்ட நேரம் அமர்ந்திருப்பது உடல்நலக் கோளாறுகளுடன் தொடர்புடையது. ஆனால் ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்கும் வாழ்க்கை முறையின் ஆபத்துகளை உங்களால் முறியடிக்க முடியும்.
வங்கதேசம்-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் நட்பு; இந்தியாவிற்கு கவலை அளிக்கும் விஷயமா?
வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையிலான நெருக்கம் இந்தியாவின் உத்தி ரீதியான பாதுகாப்பு நலன்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் கவலையாகவும் பார்க்கப்படுகிறது.
தேர்வு அமைப்புகள் மீதான நம்பிக்கை தேய்கிறதா? நீட் வினாத்தாள் கசிவு, மறுதேர்வுக்கு பிறகு எஞ்சியுள்ள கேள்விகள்
"மே 3ஆம் தேதி நடந்த தேர்வுக்குப் பிறகு, தேர்வு முடிந்துவிட்டதாகக் கருதி பெரும்பாலான மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியிருந்தனர் அல்லது சுற்றுலா சென்றிருந்தனர். இந்நிலையில், மீண்டும் புதிதாகப் படிப்பைத் தொடங்குவது எளிதான காரியமாக இருக்கவில்லை."
மும்பை: முஹர்ரம் ஊர்வலத்தில் 'விஷ மாத்திரை' விநியோகித்த நபர் கைது - 14,900 மாத்திரைகள் பறிமுதல்
மும்பையில் முஹர்ரம் ஊர்வலத்தின் போது வலி நிவாரணி என்ற பெயரில் எலி விஷம் கொண்ட மாத்திரைகளை விநியோகித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 14,900 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. என்ன நடந்தது?
ஹிப்னிக் ஜெர்க்: தூக்கத்தில் திடீரென உயரத்தில் இருந்து விழுவது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன்?
நம்மில் பலர் நல்ல உறக்கத்தில் இருக்கும் தறுவாயில் திடீரென ஏதாவது ஓர் உயரத்தில் இருந்து கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்பட்டு அச்சத்தில் துள்ளி விழித்திருப்போம். அதற்கு என்ன காரணம்?
சூர்யவன்ஷியை இந்திய அணியில் சேர்க்காதது பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியைப் பெற்று அயர்லாந்து தொடரைக் கைப்பற்றியது. இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷியை சேர்க்காதது பற்றி கிரிக்கெட் நிபுணர்கள் கூறுவது என்ன?
காணொளி, காணொளி: ஒரே வானவில் உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் வெவ்வேறு வடிவில் தோன்றும் என்று தெரியுமா?, கால அளவு 0,59
ஒரு வானவில், உங்கள் பார்வைக்கும், உங்கள் நண்பரின் பார்வைக்கும் ஒரே மாதிரியாகத் தெரிவதில்லை. ஏன் தெரியுமா?
அயர்லாந்திடம் மீண்டும் தோல்வி: சூர்யவன்ஷியை இந்திய அணியில் சேர்ப்பதில் தயக்கம் ஏன்?
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு எதிராக மீண்டும் தோல்வியடைந்திருக்கிறது. நேற்று (ஜூன் 28) நடந்த 2வது டி20 போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி.
ஔரங்கசீப் ஆட்சி எப்படி இருந்தது? புதிய புரிதலை வழங்கும் வரலாற்று ஆவணங்கள்
கடந்த 16, 17ஆம் நூற்றாண்டில் முகலாய ஆட்சியில் இந்திய மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? அப்போதைய கள நிலவரங்களை வெளிப்படுத்தும் பழைய ஆவணங்கள் கூறுவது என்ன?
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
சபரிமலை வழக்கின் தீர்ப்பு இஸ்லாம் உள்பட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக்கூடும்?
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இந்து மட்டுமின்றி, இஸ்லாம் உள்ளிட்ட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும்?
'இதற்காகவே உயிருடன் இருந்தேன்' - சௌதியில் ரூ.34 கோடி குருதிப் பணம் கொடுத்து மீண்டு வந்த கேரள கார் ஓட்டுநர் உருக்கம்
சௌதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள கார் ஓட்டுநர் அப்துல் ரஹீம் 20 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். குருதி பணமாக ரூ.34 கோடி திரட்டிக் கொடுக்கப்பட்டதன் மூலம் மரண தண்டனையில் இருந்து அவர் விடுபட்டார்.
நம் உடலில் வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவது ஏன்? அதனை கட்டுப்படுத்துவது எப்படி?
சில நேரங்களில் நம் உடலில் இருந்து வாயு வெளியேறும்போது கடுமையான துர்நாற்றம் வீசுவது ஏன்? துர்நாற்றம் வீசும் வாயு, ஒருவரது ஆரோக்கியம் குறித்து என்ன சொல்கிறது? இதைக் கட்டுப்படுத்த முடியுமா?
திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்? திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு
திருச்செந்தூர முருகன் கோயில் கடந்த சில நாட்களாக கவனம் பெறும் நிலையில், இந்த கோயிலில் இருக்கும் திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்? கோயிலின் வரலாறு என்ன? என்பதைப் பார்க்கலாம்.
'அமெரிக்கா, இஸ்ரேலிடம் இல்லாத ஒன்று இரானிடம் உள்ளது' - இன்றும் பொருந்தும் 200 ஆண்டு கோட்பாடு
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராணுவ சிந்தனையாளர் முன்வைத்த கோட்பாடுகள் இன்றைய இரான் போருடன் கச்சிதமாகப் பொருந்திப் போவது எப்படி?
நீண்ட ஆயுள், ஆரோக்கியம் தரும் சூப்பர்ஃபுட்: 'மத்தி மீனில்' உள்ள 3 முக்கிய சத்துகள்
மத்தி மீன்களைத் தொடர்ந்து உண்பதால் கிடைக்கும் இந்த நன்மைகள் மற்றும் இதர ஆரோக்கிய நன்மைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
முதல்வர் விஜய் சென்ற தேவாலயத்திற்கு இந்திய வரலாற்றில் உள்ள முக்கியத்துவம் என்ன தெரியுமா?
புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்குள் அமைந்திருக்கும் புனித மேரி தேவாலயம் சுமார் 345 ஆண்டுகள் பழமையானது. அதன் வரலாறு என்ன? இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
பாகிஸ்தான், சீன நாணய மதிப்பு உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு - என்ன காரணம்?
பாகிஸ்தானிய ரூபாய் கடந்த ஓராண்டாக ஒப்பீட்டளவில் நிலையாக இருந்து வருகிறது. சீனா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாணயங்களும் டாலருக்கு எதிராகக் கணிசமாக வலுப்பெற்றுள்ளன. இதற்குக் காரணம் என்ன?
வெள்ளைப் புலி என்பது தனி ஒரு புலி இனமா? நீலகிரி மாவட்டத்தில் தென்பட்ட புலி பற்றி ஆய்வாளர்கள் விளக்கம்
நீலகிரி வனக்கோட்டத்துக்குட்பட்ட அவலாஞ்சியில் வெள்ளைப்புலி ஒன்றை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தென்பட்ட வெள்ளைப் புலி ஒரு தனி புலி இனமா?
'நான் கண்ணீர் விட்டு அழுதேன்': மார்பக குறைப்பு அறுவை சிகிச்சை செய்த பெண்கள் கூறியது என்ன?
பிரிட்டனில் தற்போது உறுப்புப் பெரிதாக்கும் சிகிச்சைகளைவிட மார்பகங்களை சுருக்கும் சிகிச்சைகளையே அதிகமானோர் தேர்ந்தெடுக்கின்றனர்
இலங்கையில் சீன திட்டங்களுக்கு இந்தியா முட்டுக்கட்டையா? சீன தூதரின் பேச்சால் எழும் விவாதம்
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீனா முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு 'தேவையற்ற வெளி அழுத்தங்கள்' முட்டுக்கட்டை போடுவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஜென்ஹாங் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய சர்ச்சைக்குரிய திட்டங்களின் கள நிலவரம் என்ன? சீனத் தூதுவர் குறிப்பிடும் அந்த 'முட்டுக்கட்டைகள்' மற்றும் 'முதலீட்டு முயற்சிகள்' எத்தகையவை?
வெயில் 40 டிகிரி தாண்டினால் உடலில் என்ன நடக்கும்? உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைக்க எளிய வழிகள்
வெயில் கொளுத்துகிறது. வெப்ப அலைகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலைகள் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்


